Latestமலேசியா

அரசியல் செல்வாக்கு கொண்ட ஊடக நிறுவனங்கள்; முடக்கும் முயற்சியில் அரசாங்கம்!

கோலாலம்பூர், நவ.29- ஊடக நிறுவனங்களின் பங்குத்தாரர்களாக செயல்படும் அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சிகளின் பங்குகளை, அந்த ஊடக நிறுவனங்களில் குறைக்கும் முயற்சிகளை அரசாங்கம் பரிசீலனை செய்து வருகிறது என்று தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் தியோ கூறினார்.

எந்தக் கட்சியையும் சார்ந்திராமல், நியாயமாக செயல்பட வேண்டிய அவசியம் ஊடகங்களுக்கு உள்ளது என்று அவர் சொன்னார்.

“பங்குத் தாரர்களாக இருக்கும் அத்தலைவர்கள் மற்றும் கட்சிகள், தங்களின் செல்வாக்குகளை பயன்படுத்துவதை கட்டுப் படுத்துவது தொடர்பில் அரசாங்கம் பரிசீலனை செய்யவிருக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.

“பிரசுரிக்கப் படும் அறிக்கைகள் நடுநிலையாக இருப்பதோடு மட்டுமல்லாமல், உண்மைச் சம்பவத்தை வெளிப்படையாக கூற வேண்டும். நாடு தழுவிய நிலையில் ஏதேனும் விவகாரம் நடைபெறும் பட்சத்தில் மக்கள் அது குறித்த தகவல்களை முழுமையாக அறிந்து, விவாதிக்க அந்த அறிக்கைகள் வழி வகுக்க வேண்டும்” என்று கோபிந்த அறிவுறுத்தினார்.

உலகளாவிய நிலையில், பிரசுரிக்கப் படும் செய்திகள் அடிப்படையில் தான் மக்கள் தங்கள் நாட்டு நிலவரம் மற்றும் அனைத்துலக நிலவரங்கள் குறித்த தகவல்களை பெறுகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker