Latestசினிமா

தமிழ்க் கவர்ச்சிப் பட நாயகி ரியாமிகா தற்கொலை!

சென்னை, நவ. 29- ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த ரியாமிகா (வயது 26) சென்னையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் ஹரியின் உதவியாளர் சுந்தர் இயக்கத்தில் தமிழ், இந்தி, ஆகிய படங்களில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் எக்ஸ் வீடியோ. முதல் படத்திலே மிகவும் கவர்ச்சியான பாத்திரத்தில் நடித்து அனைவருடைய கவனத்தையும் தன்னுடைய பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் வளர்ந்து வரும் நடிகை ரியாமிகா.

அதனை தொடர்ந்து ஆட்டம் ஆரம்பம், குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் படங்களில் நடித்து ஓரளவுக்கு தமிழ் மக்களுக்கு தெரிந்த முகமாக மாறியிருந்தார்.

இந்நிலையில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வளர்ந்து வரும் இளம் நடிகை திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது உடலை கைப்பற்றியுள்ள போலிசார் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சரியான பட வாய்ப்புகள் வராத காரணத்தினாலே அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker