Latestமலேசியா

‘மாணவர் முழக்கம்’ புகழ் கிவேஷா-நவின்-கமல்ராஜ் யூபிஎஸ்ஆரில் சிறப்பு தேர்ச்சி!

கோலாலம்பூர்,நவ.29- வரும் சனிக்கிழமையன்று சிங்கையில் நடைபெறவுள்ள ஐந்தாவது அனைத்துலக மாணவர் முழக்கம் பேச்சுப் போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதித்து சிலாங்கூர், காசல் பீல்ட் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த நவின் செல்வ சுப்பிரமணியம், பேரா, மகிழம்பூ தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த கிவேஷா சுந்தர், மற்றும் பேரா, காப்பிஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த கமல்ராஜ் குணாளன் ஆகியோர் களமிறங்கவுள்ளனர்.

தற்போது பேச்சுப் போட்டிக்காக சிங்கைக்கு பயணித்துக் கொண்டிருக்கும் இந்த மூன்று மாணவர்களும் பேச்சாற்றலில் மட்டும் வல்லவர்கள் என்று எண்ணி விடாதீர்கள். படிப்பிலும் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று அவர்கள் இன்று காலையில் வெளியான யூபிஎஸ்ஆர் தேர்வு முடிவில் நிரூபித்துக் காட்டிவிட்டனர்.

கிவேஷாவும், நவினும் எல்லா பாடங்களிலும் 8 ஏக்கள் பெற்றுள்ள வேளை கமல்ராஜ் 7 ஏக்கள் 1 பி பெற்றுள்ளார்.

இன்னும் இரன்டு நாட்களில் பேச்சுப் போட்டி ஒருபுறம்; இன்று தேர்வு முடிவு மறுபுறம். இப்படி ஒரு பதட்டத்துடன் காலையில் தங்களின் பள்ளிக்குச் சென்ற கிவேஷா, நவின், கமல்ராஜ் ஆகியோருக்கு நல்ல செய்தி காத்திருந்தது. ஆம், அவர்கள் மூவருமே யூபிஎஸ்ஆர் தேர்வில் சிறந்த தேர்ச்சியை அடைந்துள்ளனர்.

இந்த மகிழ்ச்சியோடு மூவரும் சிங்கைக்கு பயணமாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு வணக்கம் மலேசியாவின் வாழ்த்துகள்!

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker