Latestமலேசியா

மாமன்னருக்கு கல்யாணம் ஆச்சா? தெரியாதே!- துன் மகாதீர்

கோலாலம்பூர்,நவ.29- மாமன்னர் சுல்தான் முகமட் V திருமணம் செய்து விட்டதாக கூறப்படுவது குறித்து தமக்குத் தெரியாது என்று பிரதமர் துன் மகாதீர் கூறியுள்ளார்.

“எனக்கு தெரியாது. அதிகாரப்பூர்வ தகவல் இல்லாமல் நான் எதையும் சொல்ல முடியாது” என்று செய்தியாளர்கள் மாமன்னரின் திருமணம் குறித்து வினவியபோது பிரதமர் பதிலளித்தார்.

கடந்த ஒரு வார காலமாக மாமன்னர் ஒரு ரஷ்ய அழகியைத் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வலம் வந்த வண்ணம் உள்ளன. இது குறித்து முறையாக எதுவுமே அறிவிக்கப்படவில்லை. அதனால், மாமன்னர் உண்மையிலேயே திருமணம் புரிந்து விட்டாரா இல்லையா என்ற குழப்பத்தில் உள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker