Latestமலேசியா

சீபீல்ட் ஆலய கலவரம்: இதுவரை 42 பேர் கைது!- ஐஜிபி தகவல்

ஈப்போ, நவ.30- சுபாங் ஜெயாவிலுள்ள சீபீல்ட் மஹா மாரியம்மன் ஆலயக் கலவரத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் 42 பேரை, விசாரணைக்காக போலீசார் கைது செய்துள்ளனர் என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஶ்ரீ முகமட் புஸி ஹரூண் கூறினார்.

அதில் சம்பந்தப்பட்ட மற்றவர்களையும் கைது செய்யும் பணி நீடிக்கும் என்று அவர் தெரிவித்துக் கொண்டார்.

அந்த ஆலயப் பகுதியில் இன்னும் சிலர் கூடிய வண்ணம் இருந்த போதிலும், அங்கு நிலவரம் இயல்புக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, போலீசார் அப்பகுதியில் தேவையான பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்தி வருகின்றனர் என்று அவர் கூறினார்.

“அவ்விவகாரம் தொடர்பில் மேலும் கருத்துகளை வெளியிட நான் விரும்பவில்லை. தற்போதைய சூழ்நிலையில், அங்கு நிலைமை இயல்புக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. போலீசார் அங்கு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

“அந்த ஆலயத்தின் முன்புறம் சுமார் 25 பேர் நேற்று கூடினர். ஆனால், நல்லவேளையாக, அங்கு எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. அப்பகுதி வாழ் மக்களின் வாழ்க்கை இயல்புக்கு திரும்பும் வகையில், போலீசார் தங்களின் கடமைகளை சரிவர செய்வார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன்” என்று அவர் சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker