Latestமலேசியா

சீபீல்ட் ஆலய நிலத்தை வாங்க நிதி அமைக்கப்பட வேண்டும்!- வின்சண்ட் டான் பரிந்துரை

கோலாலம்பூர், நவ.30- சீபீல்ட் ஶ்ரீ மஹா மாரியம்மன் ஆலயம் நிறுவப்பட்டுள்ள நிலத்தை வாங்குவதற்கு நிதி அமைக்கப்பட வேண்டும் என்று தொழிலதிபர் டான்ஶ்ரீ வின்சண்ட் டான் பரிந்துரை செய்துள்ளார்.

அவ்வாறு செய்வதன் வாயிலாக, அந்த ஆலயம் தற்போது நிறுவப்பட்டுள்ள அந்த நிலத்திலேயே தொடர்ந்து நீடிக்க முடியும் என்று அவர் விளக்கினார்.

“பொதுமக்கள் அந்த நிலத்தை வாங்கலாம். அதற்கான தொகையை அந்த மேம்பாட்டாளரிடம் அவர்கள் கொடுக்கலாம். அவ்வாறு செய்தால், அந்த ஆலயம் அங்கு தொடர்ந்து எவ்வித பிரச்சனையும் இல்லாமல் நீடித்திருக்க முடியும்.

“அந்த நிலத்தை சிலாங்கூர் மாநில அரசாங்கம் வாங்க வேண்டும் என்று எதிர்பார்த்தால் அது சிரமமான காரியமாக அமையும்” என்று அவர் சொன்னார்.

அந்த ஆலயத்தை வாங்குவதற்கான முன்தொகையாக ரிம.500,000-யை நன்கொடையாக டான்ஶ்ரீ வின்சண்ட் டான் வழங்க முன் வந்தார். அவரைத் தொடர்ந்து, எம்.சி.டி பெர்ஹாட் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான டான்ஶ்ரீ பெர்ரி கோவும் ரிம.500,000 வழங்கினார்.

“அந்த ஆலயம் அங்கு தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டுள்ள மற்ற மலேசியர்களும், அந்த நிலத்தை வாங்க நன்கொடை அளிப்பர் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. பொதுவாக, வழிப்பாட்டு தளங்களை மலேசியர்கள் மதிப்பர்” என்று அவர் சொன்னார்.

அந்த ஆலயம் 1.1 பரப்பளவு நிலத்தில் அமைந்துள்ளது. அதன் மதிப்பு ரிம. 14.37 மில்லியனிலிருந்து ரிம. 15.33 மில்லியன் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது பரிந்துரையை ஆதரிக்க கூடிய இதர நன்கொடையாளர்களை தாம் அணுகவிருப்பதாகவும், தனது சமூக வலைத்தளத்தை பயன்படுத்தி அந்த நன்கொடை இயக்கத்தை தாம் ஊக்குவிக்கவிருப்பதாகவும் டான் தெரிவித்துக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker