Latestமலேசியா

சீபில்ட் ஆலயம்: ஐஜிபி நேரில் சென்று பார்வையிட்டார்!

சுபாங் ஜெயா,டிச.1- சீபில்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ள பகுதியை தேசிய போலீஸ் தலைவர் டான்ஶ்ரீ முகமட் புஸி ஹருண் நேரில் சென்று பார்வையிட்டார்.

மாலை 3.50 மணிக்கு அங்குச் சென்ற ஐஜிபி கோயிலுக்கு வந்தவர்களைப் பார்த்து தற்போதைய அங்கு நிலவரம் பாதுகாப்பாக இருக்கிறதா என்பதனை விசாரித்தார். பின்னர், அங்கு அமைக்கப்பட்டுள்ள போலீஸ் கூடாரத்திற்குச் சென்றும் பார்வையிட்டார்.

ஆனால், தாம் அங்கு வந்தது தொடர்பில் அங்கிருந்த செய்தியாளர்களிடம் அவர் எதுவும் பேசவில்லை.

சீபில்ட் ஆலயம் அருகே இன்னனும் பாதுகாப்பிற்காக போலீசாரும், FRU படையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker