Latestமலேசியா

PD கடற்கரைகளைச் சுத்தமாக வைத்துக் கொள்வது எப்படி? மக்களின் ஐடியாக்களை கேட்கிறார் அன்வார்

போர்ட்டிக்சன்,டிச.1- போர்ட்டிக்சன் தொகுதியில் உள்ள பிரபல கடற்கரைப் பகுதிகளை எவ்வாறு தூய்மையாக வைத்துக் கொள்ளலாம் என்று மக்களுக்கு ஏதும் வழிவகைகள் தெரிந்தால் தங்கள் பரிந்துரைகளை தாராளமாக முன் வைக்கலாம் என அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமது தொகுதிக்குச் செல்லும் போதெல்லாம் அன்வார் காலையில் ஜோக்கிங் செய்ய கடற்கரைக்குச் செல்லத் தவறுவதில்லை. ஜோக்கிங் செய்தவாறே அங்குக் கிடக்கும் குப்பைகளை எடுத்து குப்பைத் தொட்டியில் வீசவும் அவர் தவறுவதில்லை.

போர்ட்டிக்சனில் நடந்த இடைத்தேர்தல் பிரசாரத்தின் போதிலிருந்தே அவர் இதனைச் செய்து வருகிறார். இந்நிலையில், போர்ட்டிக்சன் கடற்கரைகளின் தூய்மையாக வைத்துக் கொள்ள வழிவகைகள் ஏதும் இருக்கிறதா என்று தமது இன்ஸ்டாகிராபில் போட்ட பதிவிற்கு எக்கச்சக்கமாக கருத்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker