Latestமலேசியாவிளையாட்டு

சீனாவில் பனிச்சறுக்கு: 3 தங்கங்கள் வென்ற நமது தங்கம் ‘ஶ்ரீ அபிராமி’!

கோலாலம்பூர்,டிசம்.2- நமது குட்டி பனிச்சறுக்கு தாரகை ஶ்ரீ அபிராமி சந்திரனை நீங்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. குட்டி உருவத்தை வைத்துக் கொண்டு அபிராமி பனிக்கட்டி மீது சாகசங்கள் புரியும் அந்தக் குட்டி தேவதையை மறக்க முடியுமா என்ன?

சீனாவில் நேற்று நடைபெற்ற ‘ஐஎஸ்ஐ ஆசியா ஸ்கேட் ஷென்ஸேன் சாம்பியன் போட்டியில் அபிராமி கலந்து கொண்டும் மீண்டும் நாட்டிற்கு தங்கப் பதக்கத்தை குவித்த வண்ணம் உள்ளார்.

நேற்று தொடங்கி இதுவரையில் நடைபெற்ற 3 போட்டிகளிலுமே அபிராமி தங்கள் வென்று விட்டார்.

சிலாங்கூரை சேர்ந்த 6 வயது அபிராபி, சன்வே பிரமிட் ஐஸ் மலேசியா கிளப்பைப் பிரதிநிதித்து அப்போட்டியில் களமிறங்கியுள்ளார்.

இந்தப் போட்டியில், 7 நாடுகளைப் பிரதிநித்து 23 ஸ்கேட்டிங் கிளப்புகள் கலந்து கொண்டுள்ளன.

இவ்வாண்டு தொடக்கத்தில், பங்காக்கில் நடந்த ஆசிய பனிச்சறுக்கு போட்டியில் ஶ்ரீ அபிராமி 4 தங்கங்களையும் 1 வெள்ளியையும் 1 வெண்கலத்தையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker