Latestமலேசியா

டிசம்பர் 18: அரசு ஊழியர்களுக்கு போனஸ்!

புத்ராஜெயா,டிச.2- வரும் டிசம்பர் 18-இல் அரசாங்க ஊழியர்களுக்கு 500 ரிங்கிட் போனஸ் வழங்கப்படும். அதே நாளில், பணி ஓய்வு பெற்ற அரசாங்க ஊழியர்களுக்கு 250 ரிங்கிட் போனஸ் வழங்கப்படவுள்ளது.

கிரேட் 54 கீழ் உள்ளவர்களுக்கு அந்த 500 ரிங்கிட் வழங்கப்படும் என பொதுச் சேவைத் துறை சுற்றறிக்கை ஒன்றின் வாயிலாக தெரிவித்துள்ளது.

இந்த போனஸை பொதுச் சேவைத்துறையின் கீழ் நிரந்தரமாகவும், ஒப்பந்த அடிப்படையிலும் பணியாற்றும் ஊழியர்கள் பெறத் தகுதிப் பெறுகிறார்கள்.

எனினும், அவர்கள் இவ்வாண்டு ஜனவரி முதல் டிசம்பர் 18-ஆம் தேதி வரையில் சேவையில் இருந்திருக்க வேண்டும்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker