Latestமலேசியா

கியூபாவில் மருத்துவம் படித்ததால் மலேசிய மாணவி எதிர்கொள்ளும் சோதனைகள்!

கோலாலம்பூர், டிச.3- கடந்த 2007-ஆம் ஆண்டு, கியூபா நாட்டில் மருத்துவ படிப்பை மேற்கொள்ளும் அரிய வாய்ப்பு கிடைக்கப் பெற்ற டாக்டர் ஷாஸா ஜோயென் கோமேஸ் என்பவரின் மருத்துவ சான்றிதழ்கள், மலேசியாவில் அங்கீகரிக்கப் படவில்லை.

கியூபாவில் தன்னுடன் படித்த சக மருத்துவ மாணவரான  கயானாவைச் சேர்ந்த டாக்டர் ரமேஷ் ராம்பரோஸை கடந்த வாரம் ஷாஆலாமிலுள்ள தேவாலயத்தில் திருமணம் செய்துக் கொண்ட ஷாஸா, மலேசியாவில் மருத்துவ பயிற்சியை மேற்கொள்ள முடியாததால், கயானாவில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். அவரின் கணவர், கியூபாவில் மருத்துவராக பணி புரிந்து வருகிறார்.

தனது நாட்டின் மருத்துவ படிப்புக்கான சான்றிதழ்களை மலேசியா அங்கீகரிக்க வேண்டும் என்று கியூபா பல்வேறான முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அங்குள்ள நான்கு மருத்துவ பல்கலைக் கழகங்களை மதிப்பீடு செய்வதற்காக கடந்த 2006-ஆம் ஆண்டு ஹவானாவிற்கு பயணத்தை மேற்கொண்ட பொது சேவை துறை அந்தச் சான்றிதழை அங்கீகரிக்க மறுத்து விட்டது.

மலேசியாவில் மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் என்றால், ஷாஸா கோமேஸ், மேலும் ஒரு படிப்பை படிக்க வேண்டும். அதற்கு அவர் மேலும் ரிம.40,000-யை செலவு செய்ய வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

கம்யூனிச நாட்டில் மருத்துவ படிப்பை மேற்கொள்வது சிரமமாக இருந்த போதிலும், அந்த நாட்டின் மருத்துவ கல்வியின் வளர்ச்சியை கண்டு தாம் ஆச்சரியம் அடைந்ததாக ஷாஷா தெரிவித்தார்.

“அண்மையில், அந்நாட்டின் மருத்துவ துறை, புற்றுநோயுக்கான தடுப்பு ஊசியை கண்டு பிடித்தது. அந்நாட்டின் குழந்தைகளின் இறப்பு எண்களின் மிகவும் குறைவான எண்ணிக்கையில் தான் உள்ளது” என்று கியூபாவிலுள்ள டெ கார்லோஸ் மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்ற ஷாஷா கூறினார்.

அந்த நாட்டில் மருத்துவம் ஸ்பானிஷ் மொழியில் கற்றுத் தரப் படுவதால், தாம் 6 மாதம் ஸ்பானிஷ் மொழியை கற்றுக் கொண்டதாக அவர் சொன்னார். அதன் பின்னர், மேலும் ஆறு மாதங்களுக்கு தனக்கு கணிதம், உயிர் வேதியியல், மற்றும் உயிரியல் பாடங்கள் போதிக்கப் பட்டதாக அவர் தெரிவித்துக் கொண்டார்.

சாப்பாட்டு பிரச்சனைகள் போன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டு, தனது மருத்துவ படிப்பை படித்து முடித்து, அங்கு தனக்கான வாழ்க்கைத் துணையையும் தாம் கண்டதாக ஷாஸா கூறினார்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker