Latestமலேசியா

சிலாங்கூரிலும் கேளிக்கை மையங்கள் அதிகாலை 1 மணிக்கு மேல் செயல்படாதா?

ஷா ஆலாம்,டிச.3- அடுத்தாண்டு தொடங்கி கோலாலம்பூரில் செயல்படும் கேளிக்கை மையங்கள் அதிகாலை 1 மணி வரைதான் செயல்பட வேண்டும் என்று கோலாலம்பூர் மாநகர் மன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அவ்வாறே சிலாங்கூரில் செய்யலாமா என்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக சிலாங்கூர் மந்திரி புசார் அமிரூடின் ஷாரி தெரிவித்தார்.

மாநில அரசு இது துல்லியமாக ஆராய்ந்து வருவதாகவும், வீடமைப்பு பகுதிகளுக்கு இந்த கேளிக்கை மையங்கள் இருந்தால் கோலாலம்பூர் போன்றே அம்மையங்களை அதிகாலை 1 மணிக்கெல்லாம் மூடுவதற்கு தடை விதிக்கப்படலாம் என்றார் அவர்.

இப்போதைக்கு சிலாங்கூரில் கேளிக்கை மையங்கள் அதிகாலை 3 மணி வரை செயல்படுகின்றன. அதிகமான கேளிக்கை மையங்கள் வீடமைப்பு மையங்களுக்கு அருகில் இருப்பதால் இது குறித்து அடுத்த ஆட்சிக்குழுக் கூட்டத்தில் பேசி கலந்தாலோசிக்கவுள்ளதாக அவர் கூறினார்.

ஜனவரி முதலாம் தேதி முதல் கோலாலம்பூரில் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளுக்குரிய கேளிக்கை மையங்களை தவிர்த்து மற்ற கேளிக்கை மையங்கள் எல்லாம் அதிகாலை 1 மணிக்கு மேல் செயல்படக் கூடாது என்று கூட்டரசு பிரதேச அமைச்சர் காலிட் சாமாட் கடந்த வாரம் வியாழக்கிழமை உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker