Latestமலேசியா

சீபில்டு கலவரம்: கடும் சட்டங்களைப் பயன்படுத்த பரிசீலனை!-மொகிடின்

கோலாலம்பூர், டிச.3- சீபீல்ட் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய விவகாரம் தொடர்பிலான விசாரணையை போலீசார் எவ்வித தடையும் இன்றி மேற்கொள்ளும் பொருட்டு, பரிசீலனை செய்யப்படும் சட்டங்கள் மீதான சில தடையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின் தெரிவித்தார்.

2017-ஆம் ஆண்டு குற்றச்செயலை தடுப்புச் சட்டம் (பொகா)- (திருத்தம்), பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை சட்டம் (பொடா), 1948-ஆம் ஆண்டின் தேச நிந்தனை சட்டம், மற்றும் பாதுகாப்பு குற்றங்கள் சிறப்பு நடவடிக்கை சட்டம் (சொஸ்மா) ஆகியவற்றை பயன்படுத்தாமல் இருக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய அமைச்சரவை முடிவெடுத்ததாக அவர் சொன்னார்.

“குறிப்பிடப் பட்ட அந்தச் சட்டங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருவதால், அவை அமலில் இருந்து நிறுத்தி வைக்கப் பட்டன. ஆனால், இந்த ஆலய விவகாரத்தை தொடர்ந்து, நிறுத்தி வைக்கப் பட்ட அச்சட்டங்களை போலீஸ் தங்களின் விசாரணைக்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று முடிவெடுக்கப் பட்டுள்ளது” என்று முகைதீன் கூறினார்.

இதனிடையில், சீபீல்ட் ஆலய கலவரம் தொடர்பில் மொகிடின், அந்த இந்து ஆலய நிர்வாகத்துடன் கலந்துரையாடினார். அச்சம்பவம் தொடர்பில், போலீசார் இதுவரை 18 இந்தியர்கள், 2 சீனர்கள் மற்றும் 38 மலாய்க்காரர்களை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப் பட்டது.

நாடு தழுவிய நிலையில், அந்தக் கலவரம் குறித்து 5,000 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன. அச்சம்பவத்தில் தீயணைப்பு வீரரான முகமட் அடிப் முகமட் காசிமை தாக்கியவர்களை தேடும் பணியில் போலீஸ் துறை மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக முகைதீன் தெரிவித்துக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker