Latestஉலகம்

உலகின் சக்தி வாய்ந்த ‘பாஸ்போர்ட்’ -எந்த நாடு தெரியுமா?

துபாய், டிச.4- உலகின் இந்த ஆண்டிற்கான சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பட்டியலில் முதல் இடத்தை ஐக்கிய அரபு அமீரகம் பெற்றுள்ளது.

நமது கையில் இருக்கும் கடவுச்சீட்டு வெறும் புத்தகம் என நாம் நினைத்தால் அது முற்றிலும் தவறு. மொத்த உலகத்தையும் நமக்கு காட்டும் திறவுக்கோள் தான் அது.

விசா இன்றி மற்ற நாடுகளுக்கு பயணிக்கும் உரிமை குறிப்பட்ட சில நாடுகளின் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் விஷயமாகும்.

அப்படி உலகில் அதிக நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய வாய்ப்பளிக்கும் முதல் 55 நாடுகளின் பட்டியலை கனடாவை தலைமையிடமாகக் கொண்ட பாஸ்போர்ட் இண்டக்ஸ் அறிவித்துள்ளது.

அதில் கடந்த முறை முதல் இடத்தில் இருந்த சிங்கப்பூரை பின்னுக்கு தள்ளி ஐக்கிய அரபு அமீரகம் முதல் இடத்தை பிடித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் கடவுச்சீட்டை பயன்படுத்தி விசா இல்லாமல் 167 நாடுகளுக்கு செல்ல முடியும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. அதில் சில குறிப்பிட்ட நாடுகளுக்கு விசா இல்லாமல் சென்று அங்கு விசா பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு சக்தி வாய்ந்த கடவுச் சீட்டு நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களைக் கூட பிடிக்காத ஐக்கிய அரபு அமீரகம் தற்போது முதல் இடம் பிடிப்பதற்கு முக்கிய காரணம், கடந்த டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி மேலும் 4 நாடுகளுக்கு விசா இல்லாமல் ஐக்கிய அரபு அமீரகத்தின் கடவுச் சீட்டை வைத்து செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டதே ஆகும்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker