Latestமலேசியா

புதைமணலில் சிக்கிய கவுன்சிலர் மாரியம்மாள்! திகில் நிறைந்த  அந்த 3 நிமிடங்கள்!

ரவாங், டிசம். 4- தண்ணீர் குழாய் உடைத்துக் கொண்ட பகுதியை நேரில் பார்வையிட வந்திருந்த செலயாங் நகராண்மைக் கழகத்தின் கவுன்சிலரான பி.மாரியம்மாள் பொன்னுசாமி (வயது 52) திடீரென அங்கிருந்த புதைமணல் குழியில் சிக்கினார்.

கடந்த 3-ஆம் தேதி இந்தசம்பவம் நடந்தது. இங்கு ஜாலான் தேசாவில் உள்ள தண்ணீர்க் குழாய் உடைப்பெடுத்ததை தொடர்ந்து குடியிருப்புவாசிகள் புகார் செய்ததால் அந்த இடத்தை நேரில் பார்வையிட கவுன்சிலர் மாரியம்மாள் அங்கு வந்திருந்தார்.

நிலவரத்தை கண்டறிந்து கொண்டிருந்த போது அங்கிருந்த புதைமணலில் அவர் காலை வைத்தவும் அது அப்படியே அவரை உள்ளே இழுத்தது. திடீரென காலடியில் மண் புதைந்ததால் அவர் தடுமாறி கீழே விழுந்தார்.

கிட்டத்தட்ட இடுப்பளவைக் கொண்ட அந்த புதை மணல் குழியில் இருந்து அவரது தனிப்பட்ட உதவியாளரான பிரேமா பழனியும் சம்பவ இடத்தில் இருந்த தி ஸ்டார் நிருபர் எட்வர்ட் ராஜேந்திராவும் தக்க தருணத்தில் மீட்டனர். இந்தப் புதைகுழியில் தனது காலணிகளை இழந்த மாரியம்மாள், அப்போது மிகவும் அதிர்ந்து போய்க் காணப்பட்டார்

”இது என் வாழ்க்கையில் மிகவும் பயங்கரமான மூன்று நிமிடங்கள்” என்று மாரியம்மாள் வர்ணித்தார்.

புதை மணலை விட்டு வெளியேற நான் போராடிய ஒவ்வொரு முறையும் மேலும் என்னை அது உள்ளே இழுத்துக் கொண்டே இருந்தது. நல்ல வேளையாக, கடவுள் புண்ணியத்தில் அந்த இடத்தில் நான் மட்டும் தனியாக இல்லை. என்னுடன் பிரேமாவும் எட்வர்ட்டும் இருந்ததால் அவர்கள் என்னை மீட்டனர் என்று மாரியம்மாள் சொன்னார்.

குழாய் உடைப்பெடுத்ததால் அந்த இடத்தில் தண்ணீர் தேங்கி அந்தப் புதை மணல் குழி உருவாகி இருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker