Latestசினிமா

புற்றுநோயில் இருந்து மீள்கிறார் நடிகை சோனாலி பிந்த்ரே!

மும்பை, டிச.4- புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகை சோனாலி பிந்த்ரே சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பினார்.

தமிழில் பம்பாய், காதலர் தினம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சோனாலி பிந்த்ரே. இவர் இந்தித் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கியவர். இயக்குனரும் தயாரிப்பாளருமான கோல்டி பெல்லை மணந்த இவருக்கு ஓர் ஆண் குழந்தையும் உண்டு.

திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகிய சோனாலி, கடந்த ஜூனை மாதம் தனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக டுவிட்டரில் தெரிவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் பலரும் பிரார்த்தனை செய்து வாழ்த்தும் தெரிவித்தனர்.

இந்நிலையில் சிகிச்சை முடிந்து அவர் இந்தியா வந்துள்ளார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கணவர் கோல்டி பெல், சோனாலி பிந்த்ரே நன்கு உடல் நலம் தேறி வந்து கொண்டிருக்கிறார். இனி மேற்கொண்டு சிகிச்சைக்காக நியூயார்க் செல்ல வேண்டியதில்லை.

வழக்கமான பரிசோதனைகள் மட்டும் செய்து கொண்டால் போதும். உங்கள் அனைவரது ஆதரவுக்கு மிக்க நன்றி. அவர் மிகவும் உறுதியான- திடமான பெண். அவரை நினைத்து நான் மிகவும் பெருமைப் படுகிறேன் என்றார் அவரது கணவர் கோல்டி பெல்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker