Latestஉலகம்

ராஜபக்சே பிரதமராக தொடர இடைக்கால தடை: உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு

கொழும்பு,டிச.4- இலங்கை பிரதமராக தொடர இடைக்கால தடை விதித்ததை எதிர்த்து இலங்கை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என ராஜபக்சே கூறினார்.

இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கும் பிரதமராக இருந்த ரணில் விக்ரம சிங்கேவுக்கும் இடையேயான பனிப்போரில் கடந்த அக்டோபர் 26ஆம் தேதி அதிரடி திருப்பம் ஏற்பட்டது. பிரதமர் பதவியில் இருந்து ரணிலை நீக்கி, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமர் பதவியில் அமர்த்த சிறிசேனா உத்தரவிட்டார். நாடாளுமன்றத்தையும் முடக்கினார்.

ஆனால் நாடாளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என பல தரப்பிலும் குரல் வலுத்தது. அதை தொடர்ந்து நாடாளுமன்றத்தை 14 ஆம் தேதி கூட்டி சிறிசேனா அறிவிப்பு வெளியிட்டார்.

இருப்பினும் ராஜபக்சே குதிரைப் பேரம் நடத்தியும் பெரும்பான்மையை நிரூபிக்கத்தக்க அளவுக்கு தேவையான எம்.பிக்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து நாடாளுமன்றத்தை கலைக்க அதிபர் சிறிசேனா கடந்த 9ஆம் தேதி உத்தரவிட்டார். நாடாளுமன்றத்துக்கு ஜனவரி 5ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார். ஆனால் சுப்ரீம் கோர்ட்டின் கருத்தை அறியாமல் பொதுத்தேர்தல் நடத்த முடியாது என தேர்தல் ஆணையத்தின் தலைவர் மகிந்த தேசப்பிரியா குறிப்பிட்டார்.

இதற்கிடையில் ரணில் விக்ரமசிங்கே உள்ளிட்ட அந்நாட்டு எம்பிக்கள் 122 பேர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ராஜபக்சே பிரதமராக செயல்படவும் அமைச்சரவை கூட்டம் நடத்தவும் இடைக்கால தடை விதித்தது.  ராஜபக்சேவும் அவரால் அமைச்சராக நியமிக்கப்பட்டவர்களும் டிசம்பர் 12ஆம் தேதி ஆஜராகவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே,இலங்கை பிரதமராக தொடர இடைக்கால தடை விதித்ததை ஏற்க மாட்டோம் மேல் முறையீடு செய்வோம் என ராஜபக்சே கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker