Latestஇந்தியாசினிமாமலேசியா

ராதாரவிக்கு ‘டத்தோ’ பட்டம் கொடுக்கப்படவில்லை- மலாக்கா அரசு

கோலாலம்பூர்,டிச.4- தென்னிந்திய நடிகர் ராதாரவிக்கு “டத்தோ” பட்டம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுவதை மலாக்கா மாநில அரசாங்கம் மறுத்துள்ளது. இதனை மலாக்கா முதல்வரின் தலைமைச் செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன் மூலம் பாடகி சின்மயி சொன்னது உண்மைதான் என்பது நிரூபணமாகியுள்ளது.

ராதாரவி தனது பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்ளும் டத்தோ பட்டம் குறித்து சின்மயி மலாக்கா அரசாங்கத்துக்கு மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறார். அதற்கு, மலாக்கா முதல்வரின் பொது விவகாரங்களுக்கான சிறப்புச் செயலாளர் பிரசாந்த் குமார் பிரகாசம் அளித்த பதில் மின்னஞ்சலை சின்மயி தமது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

இந்நிலையில், மலாய் மெயில் பத்திரிகைக்கு பேட்டியளித்த பிரசாந்த், “நடிகர் ராதாரவி அந்த பட்டத்தைப் பெறவில்லை.
மலாக்கா அரசு ஆவணங்களில் அவரது பெயர் இல்லை. இது தொடர்பாக சின்மயின் மின்னஞ்சலுக்கு நான் பதிலும் அனுப்பியுள்ளேன்” என்று கூறியுள்ளார்.

வைரமுத்து மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்திய சின்மயி, தற்போது ராதாரவி மீது அடுத்தடுத்து புகார்களை கூறி வருகிறார். அவர் வைத்துள்ள டத்தோ பட்டமே போலியானது. அது இந்தியாவில் ஷாருக்கானுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என சின்மயி கூறியிருந்தார்.

இது பற்றி கருத்து தெரிவித்திருந்த ராதாரவி “சின்மயி தொடர்ந்து பொய்களை கூறி வருகிறார். வைரமுத்து மீது பொய்யான புகார் கூறினார். அதை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றதும் என் பக்கம் திரும்பி இருக்கிறார். நான் மலேசியாவில் டத்தோ பட்டம் பெற்றதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. விரைவில் அந்த ஆதாரங்களை வெளியிட்டு சின்மயி முகத்திரையை கிழிப்பேன்” என்று சவால் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker