Latestஇந்தியா

அம்பானி மகள் திருமணம்: 22 விமானங்கள் தயார்!

மும்பை, டிசம். 05- இந்திய கோடீஸ்வரர் அம்பானி மகளின் திருமணத்திற்காக விமான நிலையத்தில் இருந்து நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு செல்ல ஜாகுவார், ஆடி, பென்ஸ், பி.எம் டபிள்யூ என 1000-க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள்தயார் நிலையில் உள்ளன.

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானி-ஆனந்த பிராமல் ஆகியோரின் திருமணம் வரும் டிசம்பர் 12 -இல் மும்பையில் நடக்கவுள்ளது.

அதற்கு முன்னதாக டிசம்பர் 8-9 ஆம் தேதிகளில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மற்றும் பிரமுகர்களுக்காக தனியாக இரண்டு நாட்கள் நிகழ்ச்சி உதயப்பூரில் நடக்கவுள்ளது.

இதனால் உதயப்பூர் விமான நிலையம் தனியார் விமானங்களின் வரவால் நிறைந்து காணப்படுகின்றன. தினமும் குறைந்த பட்சமாக 30 முதல் 50 தனியார் விமானங்கள் அங்கு வந்த வண்ணம் உள்ளன.

விமான நிலையத்தில் இருந்து நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு 1000-க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பிரபலங்கள், நடிகர்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என பலரும் அம்பானியின் விருந்தினர்களாக உள்ளதால் அப்பகுதியில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டல்கள் அனைத்தும் முழுமையாக முன் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது தவிர, உதயப்பூர் விமான நிலையத்தில் இவர்களுக்காக 22 தனி விமானங்கள் நிறுத்த அனுமதி பெறப்பட்டுள்ளது. இதனால் சிறப்பு விமானங்கள் மட்டும் நிறுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. மற்ற விமானங்கள் தரையிறங்கியதும் பயணிகளை இறக்கி விட்டு உடனடியாக திரும்ப அனுப்பப்படுகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker