Latestமலேசியா

உடலுறவுகள் மூலம் எச்.ஐ.வி பரவுவது அதிகரிப்பு!

கோலாலம்பூர், டிசம்..05- உடலுறவுகள் வாயிலாக பரவும் எச்.ஐ.வி நோயின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த 2002-ஆம் ஆண்டு, உடலுறவுகள் வாயிலாக பரவிய எச்.ஐ.வி நோயின் எண்ணிக்கை 33 விழுக்காடாக இருந்ததாகவும், கடந்தாண்டு அந்த எண்ணிக்கை 91 விழுக்காடாக அதிகரித்ததாக டத்தோஶ்ரீ ஜூல்கிப்ளி அகமட் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எச்.ஐ,வி கிருமியை தடுப்பதற்காக, 95 விழுக்காட்டினருக்கு ‘ஆண்டிரெட்ரோவைரல்’ சிகிச்சை முறைக்காக மக்கள் அணுகுவது அதிகரிப்பதற்கு சுகாதார அமைச்சு முயற்சிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

“கடந்தாண்டு இறுதியில், அந்தச் சிகிச்சை முறையை 54 விழுக்காட்டினர் பெற்றனர்” என்று அவர் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். ‘அண்டிரெட்ரோவைரல்’ சிகிச்சை முறை வாயிலாக உடலுறவுகள் வாயிலாக பரவும் எச்.ஐ.வி கிருமிகளின் எண்ணிக்கை 97 விழுக்காடு குறைக்கப் படும் என்று அவர் சொன்னார்.

அதே வேளையில், பாதுகாப்பான முறையில் உடலுறவுகளை வைத்துக் கொள்வதன் அவசியத்தை சுகாதார அமைச்சு தொடர்ந்து வலியுறுத்தி வரும் என்றும் ஜூல்கிப்ளி சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker