Latestஇந்தியா

‘எனக்கு அதிபர் பதவியே வேண்டாம்!’ -கையை உதறுகிறார் சிரிசேனா

கொழும்பு, டிசம். 05- கடும் நெருக்கடி கொடுத்தால் நாட்டு மக்களுக்கு உரையாற்றி விட்டு எனது அதிபர் பதவியை ராஜினாமா செய்து விட்டுப் போய் விடுவேன் என இலங்கை அதிபர் சிரிசேனா கூறியதாக முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பிரதமராக இருந்த ரணிலை அதிபர் சிரிசேனா பதவியில் இருந்து திடீரென நீக்கினார். அப்பதவியில் முன்னாள் அதிபர் மகிந்த ராகபக்சேவை நியமித்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ராஜபக்சேவுக்கு போதிய பெரும்பான்மை கிடைக்காத நிலையில் நாடாளுமன்றத்தை கலைக்க உத்தரவிட்டார். அதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. ராஜபக்சேவும் பிரதமராக தொடரவும் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.

இதனால் இலங்கை அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே 2 தடவை நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலம் ராஜபக்சேவை எதிர்க்கட்சிகள் தோற்கடித்துள்ளன. இருந்தும் அவரை சிரிசேனா நீக்கவில்லை.

அதேநேரத்தில் ரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்கவும் சிரிசேனா மறுப்பு தெரிவித்து வருகிறார். இத்தகைய சூழ்நிலையில் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி கட்சி தலைவர்கள் அதிபரை கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தனர்.

அப்போது ரணிலை மீண்டும் பிரதமர் பதவியில் அமர்த்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. காரசாரமாக நடந்த இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. கடைசி வரையில் ரணிலை ஏற்க சிரிசேனா திட்டவட்டமாக மறுத்தார்.

ஆனால் ரணில் தரப்பினர் விடாப் பிடியாக இருந்ததால் உணர்ச்சி வசப்பட்ட சிரிசேனா, தாம் பதவியை விட்டு விலகப் போவதாக தெரிவித்தார்.

‘‘என்னை மேலும் அதிக நெருக்கடிக்கு ஆளாக்காதீர்கள். இதுபோன்று தொடர்ந்தால் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றி விட்டு எனது அதிபர் பதவியை ராஜினாமா செய்வேன். அதன் பின்னர் என்ன நடந்தாலும் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்று அவர் எச்சரித்தார்

இந்தச் சந்திப்பின் போது உடனிருந்த முன்னாள் தகவல் அமைச்சர் மனோ கணேசன் இந்த விபரங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker