Latestமலேசியா

கலவரத்தில் ஈடுபடாத பக்தர்கள் கைது!- சீபீல்ட் ஆலய நடவடிக்கைக் குழு சாடல்

சுபாங் ஜெயா.டிச.05- கடந்த வாரம் சீபீல்ட் ஆலயக் கலவரத்தில் ஈடுபடாத பக்தர்களை போலீஸ் தவறுதலாக கைது செய்துள்ளதாக ஆலய நடவடிக்கை குழு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டோரின் குடும்ப உறுப்பினர் தங்களிடம் வந்து இது தொடர்பில் முறையிட்டதை அடுத்து அவ்வாலய நடவடிக்கைக் குழு இன்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

அச்சந்திப்பில், கலவரம் நடந்த நாட்களில் கோயிலுக்கே வராத பக்தர்களை போலீஸ் கைது செய்திருப்பதாக அந்நடவடிக்கைக் குழு உறுப்பினர் டத்தோ ஏ.சந்திரக்குமணன் தெரிவித்தார்.

“நாங்கள் போலீஸ் விவகாரத்தில் தலையிடவில்லை. ஆனால், நியாயம் என்று இருக்கிறதல்லவா. உண்மையிலேயே கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யட்டும். அதில் ஈடுபடாதவர்களை கைது செய்யக் கூடாது” என்று அவர் கூறினார்.

இவ்வாறு கைதான 18 பேரின் 12 குடும்பங்கள் கோயிலுக்கு வந்து தங்களிடம் முறையிட்டதாக ஆலய நடவடிக்கைக் குழுத் தலைவர் ராமாஜி குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker