Latestஉலகம்

கூகுள் நிறுவனம் ‘ஹங்அவுட்’ சேவையினை அதிரடியாக நிறுத்த உள்ளது!

நியூ யோர்க்,டிச.05- பல்வேறு இணைய சேவைகளை வழங்கி வரும் கூகுள் நிறுவனம் ஹங்அவுட் ( Hangouts) எனப்படும் சேட்டிங் சேவையினையும் வழங்கி வருகின்றது.

எனினும் இச்சேவையினை 2020- ஆம் ஆண்டுடன் நிறுத்துவதற்கு அந்நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு பதிலாக வேறு தொடர்பாடல் சேவையினை அறிமுகம் செய்வதற்கு கூகுள் முயற்சித்து வருவதே இவ்வாறு ஹங்அவுட்  நிறுத்தப்படுவதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஹங்அவுட் சேவையில் இரு புதிய வசதிகள் உள்ளடக்கப்பட்டிருந்தன.
இவ்வாறானதொரு நிலைமையிலேயே கூகுள் நிறுவனம் இந்த அதிரடி முடிவினை எடுத்துள்ளது.

அதற்குப் பதிலாக ஆப்பிளின் “ஐ மெசேஜ்” போன்றதொரு சேவை கூகுள் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கபடுகின்றது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker