Latestமலேசியா

கைகள் இல்லை; கால்களில் துணி தைத்து பிழைக்கும் ரஹிம்!

மாச்சாங்,டிச.05- கை இல்லை என்றால் என்ன? அதான் தன்னம்பிக்கை இருக்கிறதே என்கிறார் தமது இரு கால்களினால் துணி தைக்கும் ரஹிம் யூசோப் என்ற ரஹிம் யூசோப் என்ற தையல்காரர்.

51 வயதாகும் ரஹிம் பூலாய் சோண்டோங்கில் தையல் கடை வைத்திருக்கிறார்.

நல்ல கை கால்கள் இருந்தும் வேலைக்குச் செல்லாமல் சோம்பேறிகளாகத் திரிபவர்களைப் பார்த்து பழக்கப்பட்ட நமக்கு ரஹிம் போன்றவர்களைப் பார்த்தால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

“கைகள் இல்லாவிடிலும் அருமையான கால்கள் உள்ளன. அவைதான் எனக்கு சோறு போடுகின்றன” என்று ரஹிம் சொல்வது ‘இந்த மனிதருக்குள் இத்துணை மனோபலமா?” என்று வியக்க வைக்கிறது.

ரஜிம் பிறக்கும்போதே அவருக்கு கைகளின் இன்றிதான் பிறந்திருக்கிறார். வலது பக்க தோளை ஒட்டி இரு சிறிய விரல்களும், இடது பக்க தோளை ஒட்டி ஒரு விரலும் மட்டுமே இருக்கும்.

4 வயதில் இருந்து 14 வயது அவரை இவருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். தமது கால்களை நம்பி பிழைப்பு நடத்தும் ரஹிம் ஒரு நாளுக்கு குறைந்தது 30 ரிங்கிட் சம்பாதிப்பாராம். மலாய் உடைகளை ஒரே நாளில் தைத்தும் கொடுப்பாராம். ஒரே நாளில் தைத்துக் கொடுக்க வேண்டும் என்றால் 90 ரிங்கிட் வாங்குவாராம்.

ரஹிம்மின் மனைவி நோர் அய்ஷாவுக்கு 44 வயது. அவரது உடல் பாதி செயல் இழந்துள்ள நிலையில் அவர்களுக்கு மாதம் 400 ரிங்கிட் மாநில சமூகநலத் துறை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker