Latestமலேசியா

சர்ச்சைகளில் சிக்குவதை தவிர்க்க மஸ்லீக்கு ராய்ஸ் ஆலோசனை

கோலாலம்பூர், டிசம். 0.5- தொடர்ச்சியாக சர்ச்சைகளில் ஈடுபட்டு வரும் கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக், தனது முடிவுகள் மற்றும் செயலாக்கம் குறித்து நன்கு சிந்தித்து செயல்பட வேண்டும் என்று டான்ஶ்ரீ ராயிஸ் யாத்திம் அறிவுறுத்தினார்.

அதுமட்டுமல்லாது, மஸ்லி, பிரதமர் துன் மகாதீர் மற்றும் பிரிபூமி கட்சியின் தலைவர் டான்ஶ்ரீ முகைதீன் யாசினின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ராயிஸ் கூறினார்.

“எனது இக்கருத்தால், கட்சியின் தலைமைத்துவம் என் மீது ஆத்திரமடையலாம். ஆனால், அதனை நான் ஏற்றுக் கொள்வேன்” என்று அவர் சொன்னார்.

“தவறுகள் நிகழ்வதை பார்த்துக் கொண்டு என்னால் அமைதியாக இருக்க முடியாது. அந்தத் தவறுகளால், நாட்டிற்கும் மக்களுக்கும் பாதகம் ஏற்படக் கூடும் என்ற பட்சத்தில், நான் எனது கருத்துகளை தெரிவிப்பேன்” என்று ராயிஸ் தெரிவித்துக் கொண்டார்.

1எம்டிபி விவகாரம் மற்றும் வழக்கு தொடர்பிலான விவரங்கள், நாட்டின் வரலாறு பாடத் திட்டத்தில் இணைக்கப் பட வேண்டும் என்று கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் திங்கட்கிழமையன்று தெரிவித்ததை தொடர்ந்து, அவர் கல்வி அமைச்சர் பதவி வகிக்கக் கூடாது என்று ராயிஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மஸ்லியின் கருத்துகளை ஊடகங்கள் தவறாக வெளியிட்டுள்ளன என்று மஸ்லியின் ஊடகச் செயலாளர் ஷாரூல் அமான் அறிவித்ததை தொடர்ந்து, தமது தவறுகளை ஒப்புக் கொள்ளாமல், எப்போதும் ஊடகங்களை மஸ்லி குறை கூறி வருகிறார் என்று ராயிஸ் சுட்டிக் காட்டினார்.

“ஒருமுறை அல்லது இருமுறை ஊடகங்களை குறைக் கூறலாம். தொடர்ந்து அவர்கள் மீது பழி சுமத்துவதை மஸ்லி நிறுத்திக் கொள்ள வேண்டும். அவரின் அச்செயல்களை ஊடகங்கள் மறக்காமல் பதிவு செய்துக் கொண்டு வருகின்றன” என்று அவர் சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker