Latestமலேசியா

ஜோ லோவை  எங்கு ஒளிந்திருந்தாலும் பிடித்துக் கொண்டுவர ஏற்பாடு!

கோலாலம்பூர், டிச.5- 1எம்டிபி ஊழல் விவகாரத்தில் தேடப்பட்டு வரும் தொழிலதிபர் ஜோ லோவ் மற்றும் இதர நால்வர், வேறு நாடுகளில் ஒளிந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டால், அவர்கள் மலேசியாவிடம் ஒப்படைக்கப் பட வேண்டும் என்று புக்கிட் அமான் விண்ணப்பிக்கும் என்று போலீஸ் படைத் தலைவர் டான்ஶ்ரீ முகமட் ஃபூஸி ஹரூண் கூறினார்.

லோவ் தெக் ஜோ, எரிக் என்றழைக்கப் படும் டான் கிம் லோங், 1எம்டிபி தொழில் மேம்பாட்டு இயக்குநர் டான் கீ சீ அல்லது கேசி, 1எம்டிபி பொது ஆலோசகர் லூ ஆய் ஸ்வான் அல்லது ஜாஸ்மின், மற்றும் 1எம்டிபியின் நிதி நிர்வாக இயக்குநர் கே சொங் ஹெங் அல்லது தெரென்ஸ் ஆகிய நால்வர் மீதும் நேற்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப் பட்டது.

“ரிம. 4.2 பில்லியன் பண மோசடி விவகாரத்தில் அவர்கள் மீது 13 குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டுள்ளன. அந்த ஐவரும் எங்கு அடையாளம் காணப் பட்டாலும், அவர்களை உடனடியாக மலேசியாவிற்கு அழைத்து வரும் வகையில், இண்டர்போல் மற்றும் இதர நாட்டு போலீஸ் துறையின் உதவியை நாம் நாடவுள்ளோம்” என்று ஃபூஸி சொன்னார்.

“அந்த ஐவரும் நாட்டிலிருந்து தப்பித்து வேறு எங்கோ தலைமறைவாக வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் எந்த நாட்டில் காணப் பட்டாலும், அவர்கள் நாட்டிற்கு கொண்டு வரப் பட வேண்டும் என்று நாங்கள் சட்டத்துறை தலைவரிடம் விண்ணப்பிப்போம்” என்று அவர் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker