Latestசினிமா

நடிகர் ராதாரவி பொய் சொல்வதை நிறுத்துவாரா? -சின்மயி

சென்னை, டிசம். 05- கவிஞர் வைரமுத்துவை அடுத்து தற்போது நடிகர் ராதாரவிக்கும் சின்மயிக்கும் இடையே மோதல்கள் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே போகின்றன.

‘டப்பிங்’ யூனியனில் இருந்து சின்மயியை அதன் தலைவரான ராதாரவி நீக்கியதையடுத்து பிரச்சனை சூடுபிடித்து விட்டது.

மேலும் ராதாரவி குறித்து சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் ராதாரவி தனது பெயருக்கு பின்னால் போட்டுக் கொள்ளும் ‘டத்தோ’ பட்டம் பொய்யானது என்றும் இது குறித்து மலேசியாவின் முக்கிய அதிகாரிக்கும் மின்னஞ்சல் அனுப்பியதையும் வெளியிட்டார்.

இந்நிலையில் சின்மயி கூறியது அனைத்தும் பொய் என்றும் விரைவில் சின்மயி மீது நடவடிக்கை எடுப்பேன் என்றும் ராதாரவி கூறினார்.

இதற்கு பதிலளித்துள்ள சின்மயி, “தொடர்ந்து ராதாரவி பொய் சொல்லி வருகிறார். நான் கூறும் உணமைகளை அவர் ஏறக மறுத்து நான் பொய் சொல்வதாக உணமைக்கு ப்புறம்பாக பேசி வருகிறார். பொய் சொல்வதை ராதாரவி முதலில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சின்மயி அறிவுறுத்தி உள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker