Latestமலேசியா

முஸ்லிம் – முஸ்லிம் அல்லாதார் மோதலை தூண்டுகிறார் ஹாடி அவாங்! -லிம் குவான்

கோலாலம்பூர், டிசம். 05- முஸ்லிம் அல்லாதவர்களுடன் முஸ்லிக்ளை மோதவிட முயற்சிக்கும் பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கின் செயலுக்கு ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கண்டனம் தெரிவித்தார்.

‘ஐசெர்ட்’ எனப்படும் சிறுபான்மையினருக்கு எதிரான இனப் பாகுபாடுகளை முற்றாக நீக்குவது மீதான ஐநா பிரகடனத்திற்கு எதிராக பேரணிக்கு ஆள் திரட்டுவதற்கு நியாயம் கற்பிக்கும் வகையில் முஸ்லிம் அல்லதாவர்களுடன் முஸ்லிம்களை பொருத விட ஹாடி அவாங் முனைதவதாக லிம் சாடினார்.

நாடாளுமன்றத்தில் பக்காத்தான் அரசாங்கத்தின் முஸ்லிம் எம்பிக்களைக் காட்டிலும் முஸ்லிம் அல்லதாத எம்பிகள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால் ஐசெட்டிற்கு எதிரான பேரணி அவசியம் என்று ஹாடி அவாங் சுட்டிக் காட்டி இருப்பது மிகவும் சினத்தை தூண்டி விடும் தன்மையில் அமைந்திருப்பதாக லிம் சொன்னார்.

பல்வேறு இன மற்றும் மதப் பின்னணிகளைக் கொண்ட அனைத்து மலேசியர்கள் மத்தியிலும் தேசிய ஒற்றுமையை போதிப்பதற்கு பதிலாக மலேசியர்களைப் பிளவுபடுத்தி முஸ்லிம்களை முஸ்லிம் அல்லாதவர்களுடன் மோதவிட ஹாடி அவாங் முயற்சிக்கிறார் என்றார் அவர்.

முதலில் அவர் மேற்கொள் காட்டிய புள்ளி விபரம் தவறானது. பக்காத்தானில் 66 முஸ்லிம் அல்லாத எம்பிகள் இருக்கிறார்கள் என்றும் 58 முஸ்லிம் எம்பிக்கள் இருக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். உண்மையில் பக்காத்தானில் 62 முஸ்லிம் எம்பிக்கள் உள்ளனர்.

முஸ்லிம் அல்லாத பூமிபுத்ரா எம்பிக்கள் உள்ளடக்கிப் பார்க்கும் போது 70க்கு 58 என்ற கணக்கில் பூமிபுத்ரா எம்பிகள் பக்காத்தானில் உள்ளனர். சபா, சரவாவைச் சேர்ந்த முஸ்லிம் அல்லாத பூமிபுத்ராக்களை அவர்கள் முஸ்லிம் அல்லாதவர்கள் என்பதற்காக சமமாக பார்க்கவில்லையா ஹாடி? என்று லிம் கேள்வி எழுப்பினார்.

மேலும், செனட்டர்கள் அமைச்சரவையில் உள்ள 28 அமைச்சர்களில் 17 பேர் முஸ்லிம்கள். 11 பேர் மட்டுமே முஸ்லிம் அல்லாதவர்கள். துணையமைச்சர்களில் 18 பேர் முஸ்லிம்கள். 9 பேர் முஸ்லிம் அல்லாதவர்கள். நாடாளுமன்றத்தில் உள்ள 222 எம்பிக்களில் 140 பேர் முஸ்லிகள். அவர்களில் 82 பேர் மட்டுமே முஸ்லிம் அல்லாதவர்கள் என்று நிதியமைச்சருமான லிம் விளக்கினார்.

நாடாளுமன்றத்தில் 63 விழுக்காட்டினர் முஸ்லிம் எம்பிகளாக இருக்கும் போது எப்படி முஸ்லிம்களின் உரிமைகளுக்கு மிரட்டல் ஏற்படும்? ஹாடியின் வாதப் படியே பார்த்தாலும் நாடாளுமன்றத்தில் உள்ள 63 விழுக்காடு முஸ்லிம் எம்பிக்களால் தங்களுக்கு மிரட்டல் என்று முஸ்லிம் அல்லாதவர்கள் கருதக் கூடாதா? என்று லிம் வினவினார்.

ஐசெர்ட் பிரகடனத்திற்கு எதிராக பேரணி நடத்துவதற்கு அவசியம் இல்லாத நிலையில் பாஸ் கட்சி அதனைக் கைவிட்டு விட்டு, முன்பு ஆட்சி புரிந்த அம்னோ மற்றும் தேசிய முன்னணி அரசாங்கத்தில் நடந்த நிதி ஊழல்களுக்கு எதிராக அக்கட்சி ஆட்சேப பேரணி நடத்தவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker