Latestஉலகம்

யூ டியூப் மூலம் 110 கோடி டாலர் சம்பாதிக்கும் 7 வயது சிறுவன்- (video)

நியூயார்க். டிசம்.05- ஏழு வயது அமெரிக்கச் சிறுவன் ஒருவன் யூ டியூப் வீடியோ மூலம் ஆண்டுக்கு  110 கோடி டாலர் வரை சம்பாதித்து வருகிறார்.  ரயான் என்கிற ஏழு வயது சிறுவனுக்கு விளையாட்டு பொருள்கள் என்றால் அவ்வளவு இஷ்டம்.

இந்நிலையில் அவர் வைத்திருக்கும் அல்லது புதிதாக வாங்கும் விளையாட்டு பொருள்களை விமர்சனம் செய்து யூ டியூப் சமூக வலைத் தளத்தில் வெளியிட்டு வருகிறார்.

சுமார் 17 மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ள ரயான், அதிகச் சம்பளம் ஈட்டும் நட்சத்திரங்களில் முதல் நிலையைப் பிடித்துள்ளார். அதாவது வருடத்திற்கு 110 கோடிக்கு மேல் சம்பாதித்து வருகிறார்.

மிகுந்த நகைச்சுவை உணர்வுடன் விளையாட்டுப் பொருள்களை விமர்சிக்கும் இவரது வீடியோக்கள் சுமார் 26 பில்லியன் தடவை பார்க்கப்பட்டுள்ளன.

மார்ச் 2015 லிருந்து அவர் காணொளிகளைப் பதிவேற்றம் செய்து வருகிறார். வளர்ந்ததும் விளையாட்டுப் பொருட்கள் வடிவமைக்கும் துறையில் ஆர்வம் செலுத்த உள்ளதாக ரயான் விரும்புகிறார்.

தற்போது ரயானின் பெயரில் சட்டைகள் மற்றும் விளையாட்டுப் பொருள்களும் வால்மார்ட் பேரங்காடியில் விற்பனையாகி வருகின்றன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker