Latestமலேசியா

வரலாற்று பாடத்தில் 1எம்டிபி: அப்படியெல்லாம் சொன்னாரா அமைச்சர்?

கோலாலம்பூர், டிசம். 05- 1எம்டிபி விவகாரம் குறித்த தகவல்கள் புதிய வரலாறு பாடத் திட்டத்தில் இணைக்கப் படும் என்று கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் கூறவில்லை என்று அவரின் ஊடக செயலாளர் ஷாருல் அமான் முகமட் ஷாரி கூறினார்.

“1எம்டிபி முறைகேடு குறித்த தகவல்கள் வரலாறு பாடத் திட்டத்தில் இணைக்கப் பட வேண்டும் என்று மஸ்லி கூறியதாக ஊடகங்களில் வெளியிடப் பட்ட செய்தியில் உண்மையில்லை.

“அந்த வழக்கு குறித்த தகவல்களை வரலாறு பாடப் புத்தகம் மற்றும் பாடத் திட்டத்தில் இணைக்கலாமா, வேண்டாமா? என்பது குறித்து கல்வி அமைச்சின் பாடத் திட்ட கல்வி குழு தான் முடிவெடுக்கும்” என்று ஷாருல் சொன்னார்.

இதனிடையில், அறிவார்ந்த சொற்பொழிவு திறனை மெருகூட்டும் வகையில், உயர்கல்வி கூடங்களில், 1எம்டிபி வழக்கு குறித்த விவரங்கள் பகிர்ந்துக் கொள்ளப் படுவதை கல்வி அமைச்சு வரவேற்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

1எம்டிபி விவகாரத்தை நாட்டின் வளர்ந்து வரும் தலைமுறையினர் பின்பற்றி விடக் கூடாது என்ற வகையில், அது குறித்த விவரங்கள், நாட்டின் வரலாறு அல்லது சரித்திர பாடத் திட்டத்தில் குறிப்பிடப் படும் என்று மஸ்லி நாடாளுமன்றத்தில் கூறியதாக கடந்த திங்களன்று தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker