Latestஇந்தியா

ஹிட்லரை போல நடந்து கொள்ளாதீர்! – இலங்கை அதிபர் மீது ரணில் தாக்கு

கொழும்பு, டிசம்.5 – ஹிட்லர் போல நடந்து கொள்ளாதீர்கள் என இலங்கை அதிபர் சிரிசேனாவை ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.

இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை பதவியில் இருந்து நீக்கி விட்டு புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சேவை அதிபர் சிரிசேனா நியமித்தார். ராஜபக்சேவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு பொதுத் தேர்தல் நடத்தவும் சிரிசேனா உத்தரவிட்டார்.

ஆனால், அதிபரின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்த நிலையில் ரணில் மீண்டும் பிரதமர் பதவியில் நியமிக்க முடியாது என்று சிரிசேனா பிடிவாதமாக கூறி வருகிறார்.

இதுபற்றி ரணில் கூறுகையில், “அரசாங்கத்தில் உள்ள நாம் அனைவரும் அரசியல் சட்டத்தை காப்போம். அரசியலமைப்புடன் யாரும் விளையாட வேண்டாம். நீங்கள் (சிரிசேனா) சர்வாதிகாரி ஹிட்லர் போல நடந்து கொள்ளக் கூடாது.

நாடாளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என்றால் அதை சட்டப்பூர்வ அரசுதான் முடிவு செய்ய வேண்டும். தேர்தலுக்கு நாங்கள் பயந்தவர்கள் அல்ல. எந்த தேர்தலையும் சந்திக்கத் தயார்.

அதேநேரம் சிரிசேனா நீதிமன்ற உத்தரவுப்படி நடந்து கொள்ள வேண்டும். “இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்” என்றார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker