Latestஇந்தியா

5- ஜி சோதனை: கொத்துக் கொத்தாக மடிந்த குருவிகள்!

ஹேக், டிச.5- நெதர்லாந்தில் நடத்தப்பட்ட 5 ஜி தொழில் நுட்பத்திற்கான சோதனையின் போது அப்பகுதியில் கொத்துக் கொத்தாக குருவிகள் மடிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

செல்போன் மற்றும் செல்போன் டவர்களின் மூலமாக வெளிவரும் கதிர்வீச்சினால் பறவைகள் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, கதிர்வீச்சு பாதிப்பால் சிட்டுக் குருவிகளின் இதயம் பலவீனமடைந்து இறப்பதாக விஞ்ஞானிகளும் தெரிவித்து இருந்தனர்.

இந்த கதிர்வீச்சுக்களின் அளவு அதிகரிக்கும்போது பிற உயிரினங்களும் பெரும் ஆபத்து நேரிடும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில்,5 ஜி எனும் தொழில் நுட்பத்திற்கான சோதனை நெதர்லாந்து நாட்டில் நடத்தப்பட்டது.

ஹேம் நகரில் கடந்த அக்டோபர் மாதம் 26ஆம் தேதி நடத்தப்பட்ட இந்த சோதனையின் போது அருகில் உள்ள ஹூகைன்ஸ் எனும் பூங்காவில் நூற்றுக்கணக்கான பறவைகள் கொத்துக் கொத்தாக மடிந்தன.

இதற்கு காரணம் 5 ஜி தொழில் நுட்ப சோதனை தான் என்று கூறப்படுகிறது. அதாவது இந்த தொழில் நுட்பமானது அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான கதிர்வீச்சினை வெளியிடும்.

இதனால் ஏற்பட்ட பாதிப்பால் இந்த பறவைகள் மரணமடைந்து உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இச்சம்பவம் தொழில்நுட்ப உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது 4-ஜி தொழில் நுட்பம் நடைமுறையில் உள்ள நிலையில், அதி வேகமான மற்றும் துல்லியமான இணைய சேவையைப் பெற 5 ஜி தொழில்நுட்ப சோதனை நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker