Latestமலேசியா

99 வயது அழகனின் சட்டப் போராட்டம் வெற்றி!

கோலாலம்பூர்,டிச.05- மாதம் 1,215 ரிங்கிட் ஓய்வூதியம் கிடைக்க வேண்டிய பணி ஓய்வு பெற்ற அரசாங்க ஊழியரான அழகன் மாயழகன் என்ற முதியவருக்கு கடந்த 38 ஆண்டுகளாக ஒவ்வொரு மாதமும் 1,065 ரிங்கிட் மட்டுமே கிடைத்து வந்துள்ளது. அதாவது 150 ரிங்கிட் குறைக்கப்பட்டு ஓய்வூதியம் வழங்கப்பட்டிருக்கிறது.

இதற்கு எதிராக கோத்தா கெமுனிங்கைச் சேர்ந்த 99 வயது அழகன் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கில் அவர் வெற்றி பெற்றிருப்பதால், அவருக்கு வட்டியுடன் சேர்த்து ஒரு லட்சம் ரிங்கிட்டை வழங்குமாறு கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் அரசாங்கத்தை உத்தரவிட்டுள்ளது.

கெரேத்தாப்பி தானா மெலாயுவில் (KTM) 33 ஆண்டுகளாக 1971-ஆம் ஆண்டில் கிரேன் ஓட்டுநராக வேலை செய்த அழகன் 1971-ஆம் ஆண்டில் ஓய்வுப் பெற்றிருக்கிறார்.

அப்போது அவருடைய கிரேட் D5. அதன்படி அவருக்கு 1,215 ரிங்கிட் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். ஆனால், 1980-ஆம் ஆண்டில் அரசாங்கம் அவரது கிரேட்டை தவறுதலாக D38 என்று குறைத்து மாற்றம் செய்திருக்கிறது. அதனால், அவருக்கு அதிலிருந்து இந்த குறைந்த கிரேட்டுக்கான ஓய்வூதியமஏ வழங்கப்பட்டு வந்ததாக வழக்கறிஞர் மனோகரன் தெரிவித்தார்.

KTM-மின் மிக மூத்த ஊழியர் அழகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker