Latestஉலகம்

அடம் பிடிக்கிறதை விடுங்க: இல்லேன்னா, அதிபர் பதவியை விடுங்க! -சிரிசேனாவுக்கு கோரிக்கை

கொழும்பு, டிச.6- நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் பணியாற்ற முடியாது என அதிபர் சிரிசேனா அடம்பிடிக்க கூடாது. அப்படி முடியாவிட்டால் அவர் பதவி விலகுவது தானே சரி என்று வேண்டும் என இலங்கையின் ஐக்கிய தேசியக் கட்சிநாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியிள்ளார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலமுள்ள அணியுடன் பணியாற்ற முடியாது என்றால் அதிபர் விலக வேண்டும். அது நடக்க வேண்டும்.நாங்கள் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அதிபர் பதவியை கைவிட்டு செல்ல வேண்டும்.

எங்களுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளது. அதிபருடன் பணியாற்ற முடியாது என்று பிரதமர் கூறவில்லை. அமைச்சரவை அமைச்சர்களும் அப்படிக் கூறவில்லை.

அதிபர் தான் இப்பிரச்சனையை எழுப்புகிறார் . நாங்கள் அல்ல. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலமுள்ள அணியுடன் பணியாற்ற அதிபர் சிரிசேனா தயாராக இல்லை என்றால் அவர் பதவி விலகி வீட்டுக்கு செல்ல வேண்டும்.

அதன் பின் அரசியலமைப்பு சட்டத்திற்கு அமைய எங்களால் செய்ய முடிந்ததை செய்வோம் சட்டம் இருக்கின்றது. அவற்றுக்கு அடிபணிய வேண்டும். அதிபரும் சட்டத்திற்கு உட்பட்டவர். அவர் அரசியலமைப்புச் சட்டத்திற்கு மேலானவர் அல்ல. – இவ்வாறு முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker