Latestசினிமா

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் தீபிகா!

புதுடில்லி. டிசம். 06- போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள 2018 ஆம் ஆண்டிற்கான இந்திய பிரபலங்களின் பணக்காரர்கள் பட்டியலில் 5ஆவது இடத்தை பாலிவுட் நடிகை தீபிகா படுக்கோன் இடம் பிடித்துள்ளார்.

இந்த ஆண்டு வெளியான ‘பத்மாவத்’ படம் பல சாதனைகளை முறியடித்து வசூலை அள்ளி குவித்தது. இதன் மூலம் அப்படத்தில் நாயகியாக நடித்த தீபிகா ரூ.112.8 கோடி வருமானம் கிடைத்தது.

இதனையடுத்து 2018 இல் அதிகம் பிரபலமானவர்கள் பட்டியலில் தீபிகாலிடம் பிடித்தார். போர்ப்ஸ் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 2017 இல் 21 பெண்கள் இடம் பெற்றிருந்த நிலையில், 2018 இல் இது 18 ஆக குறைந்துள்ளது.

இருப்பினும், பட்டியலில் முதல் 5 பேரில் இடம் பிடித்துள்ள முதல் பெண் என்ற பெருமையை தீபிகா பெற்றுள்ளார். இந்தப் பட்டியலில் நடிகர் சல்மான் கான் தொடர்ந்து 3 ஆவது இடம் பிடித்து உள்ளார். இவரது வருமானம் 252.25 கோடியாகும்.

கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி இரண்டாவது இடம் பிடித்துள்ளார். இவரது வருமானம் 228.09 கோடி. அக்சாய் குமார் 185 கோடி வருமானத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். அடுத்த நிலையில் டோனி உள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker