Latestஉலகம்

 இறந்தவர் கர்ப்பப் பை மூலம் குழந்தை பெற்ற பெண்

சாவ் பாவ்லோ, டிசம். 06- உலகில் முதன் முறையாக பிரேசில் நாட்டை சேர்ந்த பெண்ணுக்கு இறந்தவரின் கர்ப்பப் பை மூலம் குழந்தை பிறந்துள்ளது. அனைத்துலக அளவில் 10% முதல் 15% பெண்கள் கருத்தரிக்க முடியாத நிலையில் உள்ளனர்.

அவர்களில் 500 பேரில் ஒரு பெண்ணுக்கு கர்ப்பப் பை கோளாறினால் இப்பிரச்சனை எழுகிறது. அவர்களுக்கு கர்ப்பப்பை மாற்று சிகிச்சை மூலம் குழந்தை பெறும் வாய்ப்பு உள்ளது.

ஆனால் பிரேசில் நாட்டை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு பிறவிலேயே கர்ப்பப் பை இல்லை. எனவே அவருக்கு வலிப்பு நோயால் இறந்த 45 வயது பெண்ணின் கர்ப்பப் பை தானமாக பெறப்பட்டு மாற்று அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டது.

சாவ் பாவ்லோ பல்கலைக்கழக மருத்துவமனை டாக்டர் டேனி இஷ்ஜென் பெர்க் தலைமையிலான குழுவினர் இந்தச் சிகிச்சையை கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பரில் செய்தனர்.

இதன் பின்னர் அந்தக் கர்ப்பப் பை மூலம் கருத்தரித்து தற்போது அந்தப் பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதற்கு முன் அமெரிக்கா, செக் குடியரசு, துருக்கி ஆகிய நாடுகளில் இறந்த பெண்களிடம் இருந்து தானம் பெற்று 10 பேருக்கு இத்தகைய மருத்துவ சிகிச்சை நடத்தப்பட்டது.

ஆனால் அவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. தற்போது இப்பெண்ணுக்கு வெற்றிகரமாக 2 கிலோ 500 கிராம் எடையுள்ள குழந்தை பிறந்துள்ளது.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker