Latestமலேசியா

எஸ்பிஎம் ‘Biology’ தேர்வுத் தாளில் பிழைகளா?

கோலாலம்பூர்,டிச.06- எஸ்பிஎம் தேர்வின் உயிரியல் (Biology) கேள்வித் தாளில் பிழைகள் இருப்பதாக கூறப்படுவதை தேர்வு வாரியம் மறுத்துள்ளது.

படிவம் 5-இன் உயிரியல் பாட நூலில் உள்ள ‘family tree’ அட்டவணைக்கு மாணவர்கள் தங்களின் அனுமானத்தை பதிலாக எழுத வேண்டும் என்பதே தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி. அதில் எந்தப் பிழையும் இல்லை என்று ஓர் அறிக்கையின் வாயிலாக தேர்வு வாரியம் இன்று கூறியுள்ளது.

எனினும், இவ்வாண்டு எஸ்பிஎம் தேர்வில், கண் பார்வையற்ற மாணவர்கள் எதிர்நோக்கிய பிரச்சனைகள் தொடர்பில் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக தேர்வு வாரியம் குறிப்பிட்டுள்ளது.

இத்தகைய பிரச்சனைகள் இனி வரும் காலங்களில் நடக்காது என்று உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker