Latestவிளையாட்டு

ஏ.எப்.எப். கிண்ண கால்பந்து: மலேசியா அதிரடி! இறுதி போட்டிக்குத் தகுதி!

பேங்காக், டிசம். 06- தாய்லாந்தின் தலைநகரான பேங்காக்கிலுள்ள ராஜ மங்களா அரங்கத்தில் நடந்த ஏ.எப்.எப். சுஸுக்கி கிண்ண கால்பந்து போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் பலம் பொருந்திய தாய்லாந்தை வீழ்த்தி ஹரிமாவ் மலேசியக் குழு இறுதியாட்டத்திற்குள் வெற்றிகரமாக காலடி எடுத்து வைத்தது.

அடுத்து டிசம்பர்11ஆம் தேதி மறும் டிசம்பர் 15ஆம் தேதிய ஆகிய நாள்களில் நடக்கவிருக்கும் இரண்டு கட்ட இறுதியாட்டத்தில் வியட்னாம் அல்லது பிலிப்பைன்ஸுடன் மலேசியா மோதவிருக்கிறது.

ஆட்டம் தொடங்கிய பின்னர் 20ஆவது நிமிடத்தில் தாய்லாந்து நடத்திய தாக்குதலை தடுக்க முனைந்த போது மலேசிய வீரர் இர்ஃபான் ஷக்காரியா சொந்தக் கோல் அடிக்க நேர்ந்ததால் தாய்லாந்து 1-0 இல் முன்னணிக்கு வந்தது.

எனினும், 27 ஆவது நிமிடத்தில் மலேசியா பதிலடி கொடுத்தது. மலேசிய வீரர் சயாமி. தொலைவில் இருந்து நடத்திய அதிரடித் தாக்குதலின் வழி ஒரு கோலைப் போட்டதால் மலேசியா ஆட்டத்தை சமப்படுத்தியது.

பிறகுதி ஆட்டத்தில் தாய்லாந்து மீண்டும் முன்னிலை பெற்றது 63ஆவது நிமிடத்தில் அக்குழு ஒரு கோலை அடித்தது என்றாலும் 70 ஆவது நிமிடத்தில் மலேசியவீரர் நோர்ஷாருல் ஒரு கோலைப் புகுத்தி ஆட்டத்தை 2-2 இல் சமநிலைக்கு கொண்டு வந்தார்.

ஆட்டம் சமநிலையில் முடியும் என்று எதிர்பார்த்திருந்த தருணத்தில் அதாவது ஆட்டம் முடிய ஒரு நிமிடம் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில் மலேசியாவுக்கு எதிராக தாய்லாந்துக்கு நடுவர் ஒரு பெனால்டி வழங்கினார்.

ஆனால், அந்த பெனால்டியை தாய்லாந்து வீரர் அடிசாக் கிராய்சோர்ன் கோலாக்கத் தவறியதால் இறுதியில் ஆட்டம் 2-2 என்ற கோல்கணக்கில் மலேசியாவுக்குச் சாதகமாக அமைந்தது. ஏற்கெனவே டிசம்பர் 1ஆம் தேதி நடந்த முதல் கட்ட அரையிறுதியில் மலேசியாவும் தாய்லாந்தும் 0-0 என சமநில கண்டது.

2ஆவது கட்ட ஆட்டத்தில் தாய்லாந்தின் சொந்தத் திடலில் அக்குழுவுடன் 2-2 இல் சமநிலை கண்டதால், எதிரியின் அரங்கில் கூடுதல் கோல் அடித்த குழு என்ற வகையில் மலேசியா இறுதி ஆட்டத்திற்குள் நுழைந்தது.

அடுத்து வியட்னாம் – பிலிப்பைன்ஸ் ஆகிய குழுக்களுக்கு இடையே நடக்கும் அரையிறுதி ஆட்டத்தின் முடிவைப் பொறுத்து வியட்னாமுடனோ அல்லது பிலிப்பைன்ஸுடனோ மலேசியா இறுதியாட்டத்தில் மோதவிருக்கிறது

ஆகக் கடைசியாக மலேசியா கடந்த 2014ஆம் ஆண்டில் ஏ.எப்.எப். சுஸுக்கி கிண்ண கால்பந்து போட்டியின் இறுதியாட்டத்திற்கு தேர்வு பெற்றது. எனினும் தாய்லாந்திடம் 4க்கு 3 என்ற கோல்கணக்கில் தோல்வி கண்டு சாம்பியனாகும் வாய்ப்பை மலேசியா இழந்தது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker