Latestஉலகம்

ஏ.டி.எம். இயந்திரத்தை தூக்கிக் கொண்டு ஓட்டம் பிடித்த திருடர்கள்!

ஜம்மு, டிசம்..06- ஏ.டி.எம். மையத்துக்கு பணத்தைத் திருட வந்த கொள்ளையர்கள் பணத்தை உடனுக்குடன் திருட முடியாத நிலையில் ஏ.டி.எம் இயந்திரத்தையே தூக்கிக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

காஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டம் வழியாக ஜம்மு பதன்கோட் நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையில் சான் ரோரியன் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த ஏடிஎம் மையத்துக்கு வந்த கொள்ளையர்கள் சிலர், அந்த ஏ.டி.எம் எந்திரத்தை உடைந்து பணத்தை திருட முயன்றனர். ஆனால் அது முடியாமல் போகவே, அந்த இயந்திரத்தை அப்படியே தூக்கிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

அந்த இயந்திரத்தில் ரூ. 3 லட்சத்து 68 ஆயிரத்து 400 இருந்ததாக ஸ்டேட் வங்கி கூறியுள்ளது. போலிசார், ஏடிஎம் இயந்திரத்துடன் தப்பி ஓடிய கொள்ளையர்களை கைது செய்யும் பணிகளை முடுக்கி விட்டு உள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker