Latestமலேசியா

சிவராஜ்ஜுக்கு ஆதரவாக தேமு எம்பிக்கள் வெளிநடப்பு!

கோலாலம்பூர்,டிச.06- கேமரன்மலை எம்பியாக இருந்த டத்தோ சிவராஜ் நேற்று மக்களவையில் இருந்து வெளியேற்றப்பட்டதைக் கண்டிக்கும் வகையில் தேசிய முன்னணி எம்பிக்கள் இன்று மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

ஓய்வு நேர விடுப்புக்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே அவர்கள் மக்களவையில் இருந்து வெளியேறி தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

சிவராஜ் மீது எழுந்துள்ள தேர்தல் குற்றச்சாட்டுக் காரணமாக அவர் செய்துள்ள மேல்முறையீடு முடிவுறும் வரை, நீதிமன்றம் கேமரன்மலை நாடாளுமன்ற தொகுதி காலியாக உள்ளது என அறிவித்ததைக் கருத்தில் கொண்டு அவரை சபாநாயகர் முகமட் அரீப் மக்களவையில் இருந்து வெளியேற்றினார்.

மேலும், சிவராஜ் வழக்கறிஞர் ஒருவரின் ஆலோசனையைப் பெற்று, சபாநாயகரின் அலுவலகத்திற்கு அவ்விவரங்களை அனுப்ப வேண்மெனவும் முகமட் அரீப் கூறி இருந்தார்.

இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்ததாக தேசிய முன்னணி தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஸாஹிட் ஹமிடி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker