Latestமலேசியா

சீபில்டு கோயில் நிலநிதி: மற்ற கோயில்களுக்கு இந்த நடைமுறை பொருந்தாது! -ராமாஜி

ஷா ஆலம், டிசம். 06- சீபில்டு கோயில் நிலத்தை வாங்குவதற்காக மக்களிடையே நிதி திரட்ட டான்ஶ்ரீ வின்செண்ட் டான் மேற்கொண்டுள்ள முயற்சியை ஶ்ரீமகா மாரியம்மன் ஆலய நடவடிக்கைக் குழு வரவேற்கிறது. ஆனால், அதே வேளையில், இந்த வழி முறை இதர கோயில்களுக்கும் பொருந்தக் கூடிய வழிமுறையாக இருக்கக் கூடாது என அது எச்சரித்தது.

இந்த நிதி முயற்சியை டான்ஶ்ரீ டானிடமே தாங்கள் விட்டு விடுவதாகவும் இதர இடங்களிலும் நிலத்திற்காக நிதியைத் திரட்டி மேம்பாட்டாளர்களுக்கு வழங்கும் தவறான நடைமுறைக்கு இதுவொரு முன்னுதாரணமாக அமைந்து விடக் கூடாது என நடவடிக்கைக் குழுவின் தலைவரான எஸ். ராமாஜி தெரிவித்தார்.

அதேவேளையில் இந்தக் கோயில் நிலப் பிரச்னைக்கு தீர்வு காணும் பொறுப்பை மாநில அரசாங்கம் தான் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று நடவடிக்கைக் குழுவின் மற்றொரு உறுப்பினரான டத்தோ சந்திர குமணன் தெரிவித்தார்.

மக்களிடம் நிதி திரட்டும் முயற்சியில் தாங்களும் ஓர் அங்கமாக இருக்க விரும்பவில்லை. அந்தக் கோயில் நிலம், அரசு கெஜட்டில் பதிவாகும் வரையில் தாங்கள் இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டப் போவதில்லை. எஙகளைப் பொறுத்தவரை கோயிலை அங்கேயே நிலைநிறுத்த வேண்டும். அதே தருணத்தில் வின்செண்ட் டானின் முயற்சியையும் நாங்கள் எதிர்க்கவில்லை என்றார் அவர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker