Latestமலேசியா

சீபீல்ட் ஆலயக் கலவரம்: வழக்கறிஞர்- MCT இயக்குநர் ஜாமினில் விடுவிப்பு!

பெட்டாலிங் ஜெயா,டிச.06- சீபில்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயக் கலவரம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த வழக்கறிஞரும், MCT நிறுவன இயக்குநரும் போலீசின் உத்தரவாதத்தின் பேரில் இன்று ஜாமினில் விடுவிக்கப்பட்டதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ மஸ்லான் மன்சோர் தெரிவித்தார்.

தலா 10,000 ரிங்கிட் ஜாமின் தொகையில் அவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டனர். எனினும், அடுத்த வாரம் புதன்கிழமை அவர்களை பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு வருமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே இதுவரையில் அந்த ஆலயக் கலவரத்தை அடுத்து 99 சந்தேக பேர்வழிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

சீபில்ட் ஆலய இடமாற்றப் பிரச்சனையால் கடந்த வாரம் அந்த ஆலயத்தில் கலவரங்கள் நிகழ்ந்தன. அந்தக் கலவரங்களில் மக்களும் தீயணைப்பு வீரர் ஒருவரும் காயமுற்றனர். பொது உடமைகள் சேதப்படுத்தப்பட்டன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker