Latestமலேசியா

டிசம்பர் 8: ஒரே நாளில் இரு மாபெரும் பேரணிகள்!

கோலாலம்பூர்,டிச.06- இந்த வார சனிக்கிழமையன்று நாட்டில் இரு மாபெரும் பேரணிகள் இடம்பெறவுள்ளன. இரண்டுமே மனித உரிமையை அடிப்படையாகக் கொண்டதே. ஆனால், வெவ்வேறு நோக்கங்களைக் கொண்டது.

ஐசெர்ட் எனப்படும் ஐநாவின் அனைத்து இன பாகுபாடுகளை அகற்றும் அனைத்துலக ஒப்பந்தத்தை அங்கீகரிப்பதில்லை என்று மத்திய அரசாங்கம் செய்த முடிவைக் கொண்டாடுவதற்காக கோலாலம்பூர், மெர்டேக்கா சதுக்கத்தில் ஐசெர்ட் எதிர்ப்பு பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்பேரணி பிற்பகல் 2 மணியில் இருந்து மாலை 6 மணி வரை நடைபெறும்.

மாறாக, பெட்டாலிங் ஜெயா- பாடாங் தீமோரில், அதே நாள் காலை 9 மணியில் இருந்து மாலை 3 மணி வரையில் பிரதமர் துன் மகாதீர் சிறப்பு பிரமுகராகக் கலந்து கொள்ளும் சுஹாக்காமின் ஏற்பாட்டிலான அனைத்துலக மனித உரிமை பேரணி நடைபெறவுள்ளது.

இந்த மனித உரிமை பேரணிக்கு தாங்கள் மூன்று மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு விட்டதாக சுஹாக்கம் கூறியுள்ளது. அதே சமயம், பெட்டாலிங் ஜெயாவில் நடக்கவிருக்கும் மனித உரிமை பேரணி குறித்து தங்களுக்கு எதுவுமே தெரியாது என ஐசெர்ட் எதிர்ப்பு பேரணியை எடுத்து நடத்து மலாய் மார்க்க அரசு சாரா இயக்கங்கள் கூறியுள்ளன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker