Latestமலேசியா

தன்னந்தனியே சூப்பர் பைக்கில் உலக நாடுகளை வலம் வரும் இந்தியப் பெண்!

சுங்கை டூவா,டிச.06-120 நாட்கள்… 10 நாடுகள்… பெங்களூர் முதல் சிட்னி வரை 28,000 கிலோமீட்டர் தூரம்… அதுவும் சூப்பர் பைக்கில்… கேண்டிடா லூயிஸ் என்ற இந்தியப் பெண் தன்னந்தனியே உலகப் பயணத்தை முன்னெடுத்திருக்கும் வேளையில் அவரது இந்தப் பயணம் தனிப்பெரும் சாதனையாக அமையும் என்பதில் ஐயமில்லை!

இந்தியா, பெங்களூரைச் சேர்ந்த 28 வயது கேண்டிடா இந்தப் பயணத்தை தொடங்கி 38 நாட்களாகிவிட்ட வேளை அவர் தற்போது மலேசியாவை வந்தடைந்துள்ளார்.

தாய்லாந்து வழியாக கெடாவை வந்தடைந்த கேண்டிடாவுக்கு பட்டர்வெர்த், சுங்கை டூவாவில் உள்ள கேபி சூன் ஹுவாட் (KB Soon Huat) மோட்டார் கடை சிறப்பான வரவேற்பு நல்கியது. கேண்டிடாவுடன் மலேசிய சூப்பர் பைக் பிரியர்களும் அந்தக் கடைக்கு படையெடுத்திருந்தனர்.

இங்கிருந்து இந்தோனேசியாவுக்கு கடல் வழியாகச் செல்லவிருக்கும் கேண்டிடா, ஹீமோர் லெஸ்த்தேவிலிருந்து ஆஸ்திரேலியா, டர்வினுக்குச் செல்லவிருக்கிறார். அவருக்கு கேபி சூன் ஹுவாட் மோட்டார் கடை அவரது SKYE சூப்பர் பைக்கிற்கு வேண்டிய உபரிப் பாகங்களை அன்பளிப்பாக வழங்கியது.

கெண்டிடா ஒரு சூப்பர்பைக் காதலி மட்டுமல்ல; அவர் ஒரு நெடுந்தூர பயணங்களின் பிரியையும் கூட. வெறித்தனமான இந்தக் காதலின் பின்னணியில் காரணம் இல்லாமலில்லை.

“சுற்றிலும் நீர்வீழ்ச்சிகள், கூப்பிடும் தூரத்தில் கோவானு நான் வளர்ந்த சூழல்தான் பைக் ஓட்டும் ஆர்வத்தை எனக்குள் ஏற்படுத்தியது. அப்பாவோடும் என் நண்பர்களோடும் நிறைய பைக் ரைட் போயிருக்கிறேன். கடந்த 10 ஆண்டுகளில் 14 நாடுகளை பைக்கில் கடந்திருக்கேன்” என்று அநாயாசமான சாதனையைச் செய்து கொண்டே அமைதியாக, அடக்கமாகச் சொன்னார் கேண்டிடா.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker