Latestஇந்தியா

பாதுகாப்புக்காக ரோபோட் நாய்களை பயன்படுத்த இந்தியா திட்டம்

புதுடில்லி, டிசம். 06- இந்திய மத்திய பாதுகாப்புப் படையின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்ட பாதுகாப்புக்கு பயன்படுத்தப்பட்ட மோப்ப நாய்களை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள ரோபோட் நாய்களைப் பாதுகாப்பு படையில் சேர்க்க இந்திய பாதுகாப்புப் படை திட்டமிட்டுள்ளது.

நிஜ நாய்களுக்குப் பதிலாக தற்பொழுது பாதுகாப்பு பணியில் பணிபுரியும் ரோபோட் நாய்களைப் பயன்படுத்த ஏறபாடு நடந்டு வருகிறது. விமானநிலைய பாதுகாப்பு பணிகளில் ரோபோட் நாய் முன்னேறிய நாடுகளான அமெரிக்கா, கனடா, ஜப்பான் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளில் ரோபோட் நாய்களே விமான நிலைய பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றன.

அதிநவீன தொழில்நுட்பத்தினால் இந்த ரோபோட் நாய்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எக்ஸ்-ரே எடுக்கும் நாய்கள் இந்த ரோபோட் நாய்கள் நிஜ நாய்களைப் போலவே, வெடிகுண்டு மற்றும் போதை பொருள் இருக்கும் இடங்களை மிகத் துல்லியமாக மோப்பம் பிடித்து விடுகின்றன.

அதே போல் விமான நிலையத்தில் உள்ள பயணிகளின் பொருட்களை அதன் கண் வழியாக எக்ஸ்-ரே எடுத்து நொடியில் சோதனை செய்கின்றது.

அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விமான நிலையங்களில் சி.டி ஸ்கேன், ஏ.ஐ பாதுகாப்பு, வெடிகுண்டு கண்டறியும் கருவி, சென்சார்கள் மற்றும் பயோமெட்ரிக் முறை எனப் பல வகை பாதுகாப்பு முறைகளை இந்தியா அறிமுகம் செய்யவுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker