Latestமலேசியா

ரோஸ்மாவுக்கு எதிரான வழக்கு: உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம்!

கோலாலம்பூர், டிசம். 06- முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பின் துணைவியார் ரோஸ்மா மன்சோர் மீதான 17 நிதிமுறைகேடு குற்றச்சாட்டுக்கள் குறித்த வழக்கு, உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை, உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்படும் விண்ணப்பம், கடந்த நவம்பர் 29ஆம் தேதியன்று அங்கீகரிக்கப் பட்டதாக செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அஷுரா அல்வி தெரிவித்தார்.

இந்த வழக்கு இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் செவிமடுப்புக்கு வந்த போது, வழக்கு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருப்பதை நீதிபதி அஷுரா அறிவித்தார்.

இன்றைய விசாரணையின் போது வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட விஷயம் மட்டும் பேசப்பட்டது. உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு எப்போது விசாரணைக்கு என்பதை அறிய தாங்கள் காத்திருப்பதாக செய்தியாளர்களிடம் பேசிய ரோஸ்மாவின் வழக்கறிஞர் டத்தோ கீதன் ராம் வின்செண்ட் தெரிவித்தார்.

நஜிப்பும் அவருடைய துணைவியாரும் இன்று நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். மிக அமைதியாக நீதிமன்ற நடைமுறைகளை கண்காணித்துக் கொண்டிருந்தனர். இவர்கள் போலீஸ் மற்றும் வழக்கறிஞர்கள் புடைசூழ வந்திருந்தனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker