Latestமலேசியா

1எம்டிபி அறிக்கை: நஜிப்பிடம் MACC மீண்டும் விசாரணை!

புத்ராஜெயா,டிச.06- 1எம்டிபி விசாரணை அறிக்கையில் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் தமது கருத்துகளை இடைச்செருகல் செய்தது தொடர்பில் அவர் இன்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு விசாரணைக்காகச் சென்றிருக்கிறார்.

அவர் காலை 10.30 மணிக்கு ஊழல் தடுப்பு ஆணையத்தைச் சென்றடைந்தார்.

1எம்டிபி அறிக்கையில் சட்டவிரோதமாக சிலவற்றை இடைசெருகல் செய்வதற்கு நஜிப் உட்பட அவரது முன்னாள் அந்தரங்கச் செயலாளர் டான்ஶ்ரீ சுக்ரி சால்லே, முன்னாள் அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான்ஶ்ரீ அலி அம்சா, முன்னாள் தலைமைக் கணக்காய்வாளர் டான்ஶ்ரீ அம்ரின் புவாங் மற்றும் 1எம்டிபியின் முன்னாள் தலைமைச் செயல்முறை அதிகாரி அருள் கந்தா ஆகியோர் உத்தரவிட்டிருப்பதாக தேசிய தலைமை கணக்காய்வாளர் டான்ஶ்ரீ டாக்டர் மடினா முகமட் நவம்பர் 24-ஆம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

1எம்டிபி அறிக்கையில் மிக முக்கியமான ஜோலோ மற்றும் 2014-ஆம் ஆண்டுக்கான 1எம்டிபியின் இரண்டு நிதி அறிக்கைகள் ஆகியவற்றை உட்படுத்திய தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டி இருந்தார்.

இது தொடர்பில் நேற்று ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணையில் தாம் அதில் ஈடுபடவில்லை என்று மறுத்திருந்தார்.
அதே சமயம், அம்பிரினும் நேற்று விசாரிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker