Latestமலேசியா

ICERD பேரணி: கோலாலம்பூரில் 6 சாலைகள் மூடப்படும்

கோலாலம்பூர்,டிச.06- இந்த வாரம் சனிக்கிழமையன்று நடக்கவிருக்கும் ICERD எதிர்ப்பு பேரணியை முன்னிட்டு கோலாலம்பூரில் உள்ள 6 முக்கிய சாலைகள் மூடப்படவுள்ளன.

1. ஜாலான் சுல்தான் ஹிஷாமுடின்
2. லெபோ பாசார்
3. ஜாலான் துன் பேராக்
4. ஜாலான் துங்கு அப்துல் ரஹ்மான்
5. ஜாலான் ராஜா லாவூட்
6. பூலாத்தான் டத்தோ ஓன்

மேற்கண்ட 6 சாலைகள் டிசம்பர் 8-ஆம் தேதியன்று காலை 6 மணி முதல் பேரணி முடியும் வரை மூடப்படும் என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோஶ்ரீ மஸ்லான் லஸிம் தெரிவித்தார்.

இந்தப் பேரணியின்போது எவ்வித அசம்பாவிதமும் நடந்து போக்குவரத்து நிலைக்குத்திவிடக் கூடாது என்பதற்காக அச்சாலைகள் மூடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, பேரணியில் கலந்து கொள்வோர் பொது போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக கோலாலம்பூர் போலீஸ் தலைநகரில் நடைபெற்ற ‘ஓப் அமான்’ செய்தியாளர் சந்திப்பில் டத்தோஶ்ரீ மஸ்லான் இது குறித்து பேசினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker