Latestஉலகம்

அழகிய முகத்திற்கு ஆசைப்பட்ட 40 பேரை அகோரமாக்கிய போலி மருத்துவர்

ரியோ டி ஜெனிரோ, டிச.8- பிரேசில் நாட்டில் முகமாற்று அறுவை சிகிச்சையைத் தவறாக செய்து ஏராளமானோரின் முகத்தை அகோரமாக மாற்றிய  மருத்துவரை போலிசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

பிரேசிலின் ஸ்லி முருகமி என்ற நபர் தனியாக தொழில் செய்ய ஆசைப்பட்டு கடந்த 2012  ஆம் ஆஅன்டு முதல் மருத்துவமனை ஒன்றினை துவங்கி நடத்தி வந்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புதிய கணக்கினை துவக்கி அதன் மூலம் அதிகமான வாடிக்கையாளருக்கு வலை வீசியுள்ளார். குறைந்த செலவில் முகத்தின் அழகை மெருகேற்றி தருவதாக வாக்கு கொடுத்துள்ளார்.

சிகிச்சையை தவறாக செய்து ஏராளமானோரின் முகத்தை அகோரமாக மாற்றிய மருத்துவரை போலிசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

பிரேசிலின் ஸ்லி முருகமி என்ற நபர் தனியாக தொழில் செய்ய ஆசைப்பட்டு கடந்த 2012ஆம் ஆண்டு முதல் மருத்துவமனை ஒன்றினை துவங்கி நடத்தி வந்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புதிய கணக்கினை துவக்கி அதன் மூலம் அதிகமான வாடிக்கையாளருக்கு வலை வீசியுள்ளார். குறைந்த செலவில் முகத்தின் அழகை மெருகேற்றி தருவதாக வாக்கு கொடுத்துள்ளார்.

அதனை நம்பி 40க்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் அவரிடம் சிகிச்சைக்கு சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சையில் பழைய முகம் கூட இல்லாமல் ஓர் அகோரமான வடிவ முகத்தினை பெற்றுள்ளனர். இவ்விவகாரம் தற்போது பிரேசிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில்  பாதிக்கப்பட்டவர்கள் பலரும் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஸ்லி சரியான உரிமம் பெறாமல் மருத்துவமனை நடத்தி வந்துள்ளதாகவும் அவர் ஒரு போலி மருத்துவர் என்பதும் தெரிய வந்துள்ளது. அவருடைய புகைப்படங்களை வெளியிட்டுள்ள போலீசார் தற்போது பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து குற்றவாளியை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் கூறுகையில் ஸ்லி பயன்படுத்திய மருந்து ஐக்கிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் உள்ள மருத்துவமனை மற்றும் அழகுசாதன கடைகளிலும் பயன்படுத்தக்கூடிய ஓர் ஆபத்தான மருந்து என தெரிவித்துள்ளனர். 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker