Latestமலேசியா

இன்றைய பேரணியை அமைதியாக நடத்துங்கள்! -துன் மகாதீர்

கோலாலம்பூர், டிசம். 07- இன்று நடக்கும் பேரணியை தடுத்து நிறுத்த அரசாங்கம் விரும்பவில்லை. அவ்வாறு செய்வது ஜனநாயகத்திற்கு முரணானது என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.

பேரணியை நடத்துவதில் பிரச்னையை இல்லை. ஆனால் அது அமைதியான முறையில் நடத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

‘ஐசெர்ட்’ எனப்படும் சிறுபான்மையினருக்கு எதிரான இனப்பாடுகளை அகற்றும் ஐநா பிரகடனத்தை அரசாங்கம் அங்கீகரிக்கக் கூடாது என நடத்தப்படும் இந்தப் பேரணிக்கு இப்போது அவசியமே இல்லை.

எனினும், ஐசெர்ட் அங்கீகாரத்தை அரசு தள்ளிவைத்து விட்டதைப் பாராட்டி நன்றி கூறவே தாங்கள் இந்தப் பேரணியை நடத்துவதாக ஏற்பாட்டாளர்கள் கூறியிருக்கும் நிலையில் அந்த முடிவை பாராட்டுவதாக துன்மகாதீர் சொன்னார்.

இந்த பேரணிக்கு அரசு அனுமதித்துள்ள போதிலும் இதன் ஏற்பாட்டாளர்கள் போலீசாருக்கும் அமலாக்கப் பிரிவினருக்கும் முழு ஒத்துழைப்புத் தந்து, பொதுச் சொத்துக்களுக்கு சேதமில்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

முடிந்தால் குப்பைகளைப் போடாதீர்கள். அதன் சுற்றுப் பகுதிகளைச் சுத்தமாக வையுங்கள். கலகமோ, அமளியோ இல்லாமல் சுமூகமாக பேரணியை நடத்துங்கள் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker